Friday, August 26, 2011

ஒரு நாள் போதுமா?


ஊழியர் (மேலாளரிடம்): சார் எனக்கு நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ் வேணும்!

மேலாளர்: போன வாரம் தலை வலிக்குதுன்னு ஒரு நாள் லீவ் கேட்டீங்க, இப்ப கால் வலிக்கு ரெண்டு நாள் கேக்குறீங்க

ஊழியர் : தல ஒன்னு தான் சார் ஆனா கால் ரெண்டு இருக்கு இல்ல அதான்.

மேலாளர்: பாத்து அடுத்த வாரம் பல் வலி வராமல் பாத்துக்கோங்க.

:)

Monday, August 22, 2011

பேஸ்புக் மொக்கை:


ஒருவன் தன்னுடைய பேஸ்புக் இல் அன்று மாடியில் தூங்க போவதாக

"Status" வைத்து விட்டு தூங்க சென்றான்.

சிறிது நேரம் கழித்து

.

.

.

.

"20" கொசுக்கள் அந்த "Status" ஐ "Like" செய்திருந்தன.

:)

Thursday, August 18, 2011

ஒரே வார்த்தை, ஓகோன்னு...


பல் (நாக்கிடம் ): நான் லேசாக ஒரு கடி கடித்தால் போதும் நீ துண்டாகி விடுவாய்
நாக்கு : நான் லேசாக ஏதாவது தவறாக பேசினால் நீ மொத்தமாய் வாயை விட்டு வெளியே பொய் விடுவாய்

Monday, August 1, 2011

இன்றைய லொள்ளு: நாங்களும் கேட்போமில்ல

ரோஜர் பெடரர்: டென்னிஸ்ல எந்த விடயமானாலும் கேளுங்க நான் பதில் சொல்றேன்.
இந்தியன்: டென்னிஸ் நெட்ல எத்தனை சந்து  (Holes)  இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்?
ரோஜர் பெடரர்: ???!!!
 
 

Saturday, July 30, 2011

பிடித்த to பிடிக்காத: பாடல் conversion


உங்களுடைய பிடித்தமான பாடலை, வெறுப்பான பாடலாக மாற்றுவது எப்படி?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ரொம்ப சுலபம், அந்த பாடலை அலாரம் டோன் ஆக செட் செய்திடுங்கள்!

அப்புறம் பாருங்கள் அந்த பாடலை கேக்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வரும்.

இன்றைய லொள்ளு : நீங்க ஏன் இப்படி பண்ண கூடாது

கீ போர்டு வாங்க கூட முடியாமல் கஷ்ட்ட பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்,

கிரிக்கெட் மட்டை
வாங்க கூட முடியாமல் கஷ்ட்ட பட்டார் தோனி,

ஒரு மெசேஜ் கூட அனுப்ப முடியாமல் இருக்கும் நீங்க ஏன் ஒரு செல் கம்பெனி துவங்க கூடாது,

யோசிங்க

நல்லா யோசிங்க

Friday, July 29, 2011

மொக்கைசாமி: ஒரு அரக்கன், ஒரு அரக்கி

 ஒரு அரக்கன், அரக்கியோட தன வீட்டுக்கு போனான்
ஆனால் பூட்டி இருந்த வீட்டை திறக்க முடியல ஏன்?


 ஏன்?
 ஏன்?
.
.
.

.
.
.

.
.
.
அவன் போனது அரக்கி (அரை - Key) யோட, முழு   key யோட போனாதானே கதவ தொறக்க முடியும்!


இது கூட தெரியலையே!


ஐயோ!


ஐயோ!  





Thursday, July 28, 2011

இன்றைய லொள்ளு: நண்பனை பற்றி

ஆசிரியர்: உன் நண்பனுக்கு ஐம்பது ரூபாய் தேவை படுது,  ஆனால் நீ நூறு ரூபாய் கொடுக்கிறாய், உன் நண்பன் உனக்கு திருப்பி எவ்வளவு தருவான்?.
மாணவன் : ஒன்னும் தர மாட்டான் சார்!
ஆசிரியர்: உனக்கு கணக்கே தெரிய மாட்டேங்குது.
மாணவன் : உங்களுக்கு தான்  சார் என் நண்பனை பத்தி தெரிய மாட்டேங்குது
ஆசிரியர்: ???!!!

ஒவ்வொரு நாளும்

"நீ உண்மையாக யாரையாவது காதலித்தால்,
நீ தினம் தினம் இறப்பாய்!"

இன்றைய லொள்ளு: சொல்லி குடுங்க

 
வாடிக்கையாளர்: அந்த புத்தகம் என்ன விலை?
 
கடைகாரர் : ஐநூறு ரூபாய்
 
வா: சொல்லி குடுங்க சார்.
 
க: சாரி சார், புத்தகம் விக்க மட்டும் தான் முடியும், சொல்லி குடுக்க லாம் முடியாது
 
வா: ???!!!

Tuesday, July 26, 2011

பாடத்தில் முட்டை வாங்கிய அறிவாளி மாணவன்

 
ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு இந்த மாதிரி பதில் அளித்தால்?
 
 
ஆசிரியர் : எந்த போரில் திப்பு சுல்தான் இறந்தார்?
மாணவன் : அவருடைய கடைசி போரில்!
 
******************************************************************
 
ஆசிரியர் : அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பு எங்கு கை எழுத்திடபட்டது?
மாணவன் :   அந்த அறிவிப்பின் அடியில்!
 
******************************************************************
 
ஆசிரியர் :  திருமண முறிவுகளுக்கு எது முதன்மை காரணம்?
மாணவன் : திருமணம் தான்!
 
******************************************************************
 
 

Sunday, July 24, 2011

கேளுங்கள் இதயம் சொல்வதை!

என் இதயத்திடம் கேட்டேன்,
நட்பு பெரிதா? காதல் பெரிதா?
என் இதயம் சொன்னது 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோ பார், என் வேலை ரத்தத்தை "Supply" செய்வது தான்,
இது மாதிரி " Out of Syllabus" ல லாம் கேள்வி கேக்காத .