Wednesday, January 21, 2009

உண்மை விளம்பி

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”



சினிமா விரும்பி.

---

தாராளமயமாக்கல்:

அதிர்ந்து போனாள் ஆயா!,
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!


---

திருக்குறளை எழுதியவர்

மாணவன் 1: நம்ம டீச்சர்க்கு என்ன ஆச்சு?

மாணவன் 2: ஏன் டா?

மாணவன் 1: திருக்குறளை போர்டு ல எழுதிட்டு , திருக்குறளை எழுதினது யார்ன்னு கேக்குறாங்க?

மாணவன் 2: !!!???


---

திரும்பி அழைக்கபட்ட தூதர்கள்:

அவளுக்கு நான் கொடுத்த பூக்கள் வீணாகவில்லை
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு!.


---

கோப படுதல்

நீங்கள் உங்கள் உயிராய் நினைப்பவர்களிடம்
கோபத்தை காட்டாதிர்கள்!

ஏன் என்றால்?

உங்கள் எதிரி என்ன வார்த்தை சொன்னாலும் வாழ்நாள் முழுக்க வலிக்காது,

ஆனால் உங்கள் உயிரானவர்கள் காக்கும் மௌனம் வாழ்நாள் முழுக்க வலிக்கும்.


---

சச்சினும் அவள் கணவனும்

ஒருத்தி: சச்சின் க்கும் என் கணவனுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்!

மற்றொருத்தி: என்ன அது?

ஒருத்தி: சச்சின் "சதம் அடிப்பார்" என் கணவர் "சாதம் வடிப்பார்"!

மற்றொருத்தி: !!!???



---

வெங்காய காதல்

அழ வைப்பது அவள் தான் என தெரிந்தும்
அடம் பிடிக்கிறது என் கண்கள்
அவளை தான் பார்க்க வேண்டுமென!.


---

செருப்பு பழமொழி

"உங்கள் செருப்பு உங்களுக்கு சரியாக
பொருந்தி போனால்,
அதை உடனே மறந்து விடுகிறீர்கள்".

ஜென் பழமொழி.


---

Tuesday, January 20, 2009

பிரியம்

பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்,

அருகில் இருந்து சண்டை போடு போதும்.

---

Sunday, January 18, 2009

நீ விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்,
ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.


---

நட்புக்கவிதை

"நான் கண்ணீர் மாதிரி
உன் சிரிப்பில் எப்போதாவது தான்
கலந்து கொள்வேன்,
ஆனால் நீ அழுகையில்
எப்போதும் உடனிருப்பேன்".


---

Friday, January 9, 2009

வெயிலின் அருமை...

நீங்கள் பல தடவை உங்களிடம் நெருக்கமாக
இருப்பவர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை,
ஏன் என்றால் கண்ணுக்கு மிக அருகில் இருப்பவைகளை
நம்மால் முழுதாய் படிக்க (பார்க்க) முடியாது.


---

Wednesday, January 7, 2009

நிமிட சுகம்

ஒருவர் மீது
ஒருவர் உரசிக்கொள்ளும்
அந்த ஒரு நிமிட
சுகத்துக்காக
நாளெல்லாம் சுற்றி திரியும்
அதிசய காதலர்கள்,
இந்த கடிகார முட்கள்.


---

தத்துவம் 1014,15,16

A+, B+, O+ ன்னு எவ்வளவோ வகை வகையாய் ரத்தம் குடித்தாலும்
கொசுவால ரத்த தானம் பண்ண முடியாது!.

என்னதான் TV விடிய விடிய ஓடினாலும் , காலையில் பார்த்தல் ஒரு இன்ச் கூட நகர்ந்திருக்காது!.

தூங்கறதுக்கு முன்னாடி தூங்க போறேன் ன்னு சொல்ல முடியும்,
ஆனா தூங்கி எந்திரிக்கறதுக்கு முன்னாடி எந்திரிக்க போறேன் ன்னு சொல்ல முடியுமா?.

உன் உறக்கம்

உறக்கம் இல்லாமல் சுற்றுகிறேன்
நீ உறங்குவதற்கு.


By

FAN.

By: படுத்துக்கொண்டு தூங்காமல் யோசிப்போர் சங்கம்.


---

கம்ப்யூட்டர் (Computer) வேலை:

தந்தை : இப்போல்லாம் கம்ப்யூட்டர் (Computer) படிச்சா தான் வேலை கிடைக்கும்.

மகன் : அப்போ "நான்" படிச்சா வேலை கிடைக்காதா?,

தந்தை : ???!!!


---

நடுவுல என்ன ?

இந்தியா, பாகிஸ்தான் ரெண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு
சொல்லுங்க பார்ப்போம்.
................................................................
................................................................
................................................................
................................................................
................................................................

தெரியலையா?,
கமா(,) தான்.


---

Tuesday, January 6, 2009

அமைதியும், புன்னகையும்.

அமைதியாய் இருப்பது , புன்னகை பூப்பது
இரண்டும் இரு பெரும் பலங்கள்,

அமைதியாய் இருத்தல்: பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்த்து விடும்.
புன்னகை பூத்தல் : எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாளித்துவிடும்.


---

நேசித்தல்

அன்னை தெரசா :
உன்னிடம் பாசம் வைக்கும் இதயத்தை நேசி ;
உன்னை வெறுக்கும் இதயத்தை இன்னும் அதிகமாக நேசி;

---

ஒப்பீடு

மகன் : அப்பா என்னை படிக்கறதுல ஒரேடியா பக்கத்து வீட்டு பொண்ணு கூட "compare" பண்ணுவீங்களே, இப்ப பாருங்க நான் எடுத்த மார்க்கு 480 அந்த பொண்ணு எடுத்த மார்க்கு 470.

அப்பா : அட அறிவாளி அந்த பொண்ணு பத்தாவது படிக்குது , நீ படிக்கிறது +2 டா

மகன் : ???!!!.


---

Sunday, January 4, 2009

எதை வைத்து

ஒரு பள்ளி நிகழ்ச்சியில் நம் அப்துல் கலாம் அவர்கள் இந்தியா
2020இல் வல்லரசாக வரும் என்று சொன்னார்!.
அவர் எதை வைத்து அப்படி சொன்னார் ?.

மைக் (MIKE) வெச்சு தான்!


---

சகுனம்

நாம வெளியே போகும் போது பூனை குறுக்கே
போனால் என்ன அர்த்தம்?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்.


---

மச்சமா?


உன் கன்னத்தில் இருப்பது மச்சமல்ல,
உலகின் அழகெல்லாம் இங்கு முடிகிறது
என்பதற்க்கான முற்றுப்புள்ளி

--கவி மாறன் (லொள்ளு சபாவின் தற்போதைய (Jan 2009) நாயகன் ).


---

Friday, January 2, 2009

32 ஆம் புத்தக கண்காட்சி -2009

http://www.bapasi.com/Chennaibookfair2009.asp

32 ஆம் புத்தக கண்காட்சி -2009
08-01-2009 to 18-01-2009

நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18 வரை

நேரம்:

வேலை நாட்களில் - மதியம் 2:30 - 8:30 வரை

விடுமுறைகளில் - முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை

இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30.


32nd CHENNAI BOOK FAIR - 2009
08-01-2009 to 18-01-2009

Time : Working Days : 2:30 pm to 8:30 pm
Holidays : 11:00 am to 8:30 pm

Venue : St.George Anglo Indian School,(opp to Pachayappan college)
Poonamalee High Road,
Aminjikarai, Chennai - 30.

மாதிரி மனிதர்:

அப்பா : உன்னோடைய "Role Model" யாரு?

மகன் : காந்திஜி!.

அப்பா : சந்தோசம் , சரி எதற்காக அவர் உனக்கு "Role Model" ஆனார் ?.

மகன் : ஏன்னா அவர் 13 வயசுலேயே கல்யாணம் பண்ணிகிட்டார்

அப்பா : ???!!!.


---

எள் என்றால் ?

ரவுடி: அய்யா நீங்க சொன்ன மாதிரியே அசிஸ்ட்டன்ட் கமிஷனர் ஐ கொன்னுட்டேன்!

தாதா : நான் எங்கடா அவர கொல்ல சொன்னேன்?.

ரவுடி: நீங்க தானே அய்யா ஒரே புழுக்கமா இருக்கு அந்த (ஏ சி ) A.C ய போட சொன்னிங்க!

தாதா : ???!!!!.


---

குடிப்பழக்கம்:

டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?

நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.

டாக்டர் : என்ன சோகம் ?

நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.

டாக்டர் : ???!!!


---

மாற்றம்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே,
ஆனால் உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால்,
அவர்களை தொலைத்து விடாதே.


---